Wednesday 18 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 13

Rate this posting:
{[['']]}
காசினி ‍ஒரு தந்தையின் உலகம்

நாளைக்கு புறப்பட‌ வேண்டும் இன்றைய பொழுது மட்டும்தான் இருக்கிறது.மனைவியிடம்

'கோயிலுக்கு போயிட்டு வரலாமா?' என்றேன்.

'எனக்கு நெறய‌ வேலை இருக்குங்க துணி துவைக்கனும்தேவையானதை எல்லாம் எடுத்து வைக்கனும்வீட்டை இன்னிக்கு சுத்தம் பன்னினால்தான் நாளைக்கு பன்ன கூடாதுஒன்னு பன்னுங்க இந்த காசினி புள்ள தொல்ல தாங்கல அவள‌ கூட்டிட்டு நீங்க போயிட்டு வாங்க நானும் நிம்மதியா வேலைய முடிச்சுடுவேன்'

'யாரு தொல்ல தாங்கல மம்மி...' என்றவாறே துணி ஊறவைத்திருந்த வாளியில் ஏறி நின்று கொண்டாள் காசினி.

'ஏ வாண்டே ஒங்க அப்பாவோட கோயிலுக்கு போயிட்டு வா போ கெளம்பு'.

'ஐய்ய் ஜாலி என்றவாறே வாளியில் இருந்து அவள் அம்மாவை பிடித்து கொண்டு கீழே குதித்தாள்.காலில் அணிந்திருந்த கொலுசு சத்தம் 'கினிங்கினிங்என்று சேர்ந்து குதித்தது.

அவளுக்கு பிடித்த சட்டை பாவாடையை எடுத்து போடச்சொன்னாள்.அவளுக்கென்றே வாங்கி வைத்திருந்த சிறிய பொட்டுகிளிப்மேக்கப் எல்லாம் கச்சிதமாக இருக்குமாறு காண்ணாடியை பார்த்து கொண்டாள்.

'மம்மி கண்ல மை இல்ல பாரு போட்டு விடுமறுபடியும் அவளிடமே போய் நின்றாள்.நமக்கும் மேக்கப்புக்கும் ஏழாம் பொருத்தம் எதாவது குறை என்றாலே என்னை உண்டு இல்லை என்று பன்னிவிடுவாள்வம்பு வேண்டாமென நான் அதில் தலையிடுவதில்லை.

'எனக்கு இருக்குற வேலையில இவ வேற..' என்றவாறே பென்சிலை எடுத்து கண்மை போட்டு விட்டாள். 'ம்ம்ம்... கண்மை போட்டபின்ன அழகாதான் இருக்கு என் பொண்ணுஎன்றவாறு கையால் திருஷ்டி கழித்தாள்.

தெருவிலிருந்து இணையும் பரபரப்பு மிகுந்த சாலையை நோக்கி நடந்தோம்.

'காசினி கைய பிடிச்சிட்டு நடக்கனும்,மெதுவா அப்பாவோட ஓரமாவே வாங்க'

'ஏன் என்ன தூக்கிட்டு வரமாட்டியா டாடி?'

'தூக்கலாம் செல்லம் ஆனா நீ பெரியவளா வளந்திட்டியே!'

ஆனா அம்மாவும் நீங்களும் 'நீ குட்டி பாப்பா பெரியவங்க பேசும்போது குறுக்க பேசகூடாதுனு சொல்றீங்க'?

'நீ என்ன மாதிரி வளந்த பிறகு பேசலாம் செல்லம்'

'நான் எப்போ வளருவேன்?!'

'கொஞ்ச நாள் ஆகும்டா'

'ரெண்டு நாளு... பத்து நாளு...' இரண்டு கைகளையும் விரித்து காண்பித்தவாறே, 'இவ்ளோ நாள்?'

'......'

'மறுபடியும் என் கைகளை இழுத்தபடியேடாடி எவ்ளோ நாள் ஆகும்ம்?!'

'சீக்கிறமாவேநம்ம வீட்டு ரோஜா செடி வளந்து பூ கொடுத்துச்சுல அது மாதிரி நாள் ஆகும்'

'ஓஹோ.. அவ்ளோ நாள் ஆகுமா?'

சிக்னல் வந்தது,

'டாடி ரெட்டுன்னா நிக்கனும் கிரீன்னா போகனும் மஞ்சல்னா வெயிட் பன்னனும் சரியா'

'சரிடா செல்லம்'

'ரெட் இப்போ நிக்கனும் ஒக்கேவாஇருவரும் சிக்னலுக்காக காத்திருந்தோம்.

இளைஞன் ஒருவன் கிடைத்த இடைவெளியில் சாலையை கடந்து ஓடிக்கொண்டிருந்தான்இரண்டு சக்கர வாகணத்தில் வந்த ஒருவன் மோதுவது போல் விலகி அவனை திட்டி கொண்டே கடந்து சென்றான்.

'டாடீ அந்த அண்ணா ஏன் ரெட் லைட் இருக்கும்போது ஓடுனாங்கஅது தப்புதானே?'

'ஆமாண்டா செல்லம்,ஆனா பாவம் அவனுக்கு அவசரமா வேலை இருந்திருக்கும்'

'அவசரம்னா போகலாமா டாடி?'

'இல்லடா செல்லம் எதுவா இருந்தாலும் கிரீன் லைட் போட்டாதான் போகனும்'

'அப்ப எதுக்கு அந்த அண்ணா போனாங்ககக?' கத்தினாள்.

பக்கத்தில் நின்ற பெண் ஒருவர் அவளை கவனித்தவாறே சிரித்துக் கொண்டு, 'உன்ன மாதிரி அவன் படிக்கல பாப்பாநீ சமத்து தானே நீங்க ஒழுங்கா சிக்னலை மதிச்சு போகனும் சரியாஎன்றாள்.

'ஒக்கே ஆன்ட்டி...' என்றவள் என்னிடம் திரும்பி 'டாடி ஏன் அந்த அண்ணா படிக்கல?'

அதற்குள் சிக்னல் மாறுவது போல் இருக்கசாலையை கடப்பதற்காக அவளை தூக்கிகொண்டேன்.

கண்ணத்தோடு ஒட்டிக்கொண்டவள் 'ஹைய்யா கிரீன் சிக்னல் போட்டாச்சு'

சிறிது தூரம் நடந்தேன்அவளை கீழே இறக்கிவிடவில்லை அதற்கு காரணமும் இருந்தது.

எதிரே பெருங்கூட்டம் நின்றிருந்ததுஒதுங்கியபடியே காசினியின் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நடந்தேன்.

'டாடி அங்க பாருங்க அந்த அண்ணாஅந்த கூட்டத்தினுள் முண்டியடித்து அவன் கையை நீட்டி கொண்டிருந்தான்.நான் எதற்காக அவளை தூக்கிகொண்டு நடந்தேனோஎதற்காக முகத்தை வேறுபக்கம் மறைத்தேனோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை.

'டாடி அது சரக்கு கடைதானே...'

'இல்லடா.. அது வந்து...'

'போ டாடி எனக்கு தெரியும்,அன்னைக்கு டீவில‌ கூட பாத்தேனே...' இடைமறித்து சொன்னாள்நான் பதில் சொல்வற்கு தேவைஇல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

'அப்டியா!என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தேன்.

'டாடி... சரக்கு குடிக்கத்தான் அந்த அண்ணா ஒடுச்சா?'

'.... சும்மா வாடா செல்லம்!'

'டாடி சரக்கு குடிப்பியா?!' அடுத்த அணுகுண்டை வீசினாள்.

'இல்லடாஉன் டாடி நல்ல டாடில குடிக்கலாம் மாட்டேன்சாதாரனமாக பொய் சொன்னேன்குடிகாரனாக இல்லாவிட்டாலும் எப்போதாவது குடிக்கும் பழக்கம் என்னிடம் இருந்தது.

'நல்ல டாடி!' கண்ணத்தை கிள்ளி முத்தம் தந்தாள்.

நல்ல டாடி ‍ இந்த பெயரை எப்படி தக்கவைப்பது என யோசித்துக்கொண்டே நடந்தேன்.

ருவழியாக கோவில் வந்து சேர்ந்தோம் காசினியை கீழே இறக்கி விட்டு சாமிக்கு பூ வாங்கி கொண்டேன்கோவிலில் மிருதுவான முருகன் இசைதமிழ் ஓடிகொண்டிருந்தது.அதென்னவோ தெரியவில்லை முருகன் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு பற்று.எனக்கு நேரெதிராக காசினி அவளுக்கு பிள்ளையார் என்றால் கொள்ளை பிரியம்அதிலும் விநாயகர் சதுர்த்தியின்போதெல்லாம் தொந்திக்கும் தும்பிக்கைக்கும் அவள் பூசும் வர்ணங்கள் அவளை மாதிரியே மிக அழகாக இருக்கும்அவள் பூசிய வண்ணங்களுடன் கடந்த‌ இரண்டு வருடத்திலும் வாங்கிய பிள்ளையார் கடலுக்கு போகாமல் எங்களது பூஜை அறையிலேயே தங்கி இருக்கிறார்தெருவில் வினாயகர் ஊர்வலம் வரும்போதெல்லாம் பிள்ளையாரை தூக்கி வைத்துகொண்டு நான் தரமாட்டேன் என அடம் பிடித்து கொண்டிருப்பாள்.

சன்னலோரம் ஊர்வலத்தை பார்த்துகொண்டே 'நீதான் ரொம்ப அழகு எங்கூடவே இருஎன்றவாறே பிள்ளையாரை அனைத்துகொண்டு பேசிகொண்டிருப்பாள்.

கோவிலில் சந்தன‌ம் கற்பூரம் குங்குமம் ஊதுபத்தி பண்ணீர் என அனைத்தும் கலந்த கலவை மனதை லேசாக்கியது.

'வாசனை சூப்பரா இருக்கு டாடீ ம்ம்ஆஆ...' என நாசியை பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்து விட்டாள்.

'ஹைய்யா பிள்ளையார்...' என்று ஓடிப்போய் முன்னால் கட்டியிருந்த தடுப்பின் மேல் ஏறி நின்றுகொண்டு ரசித்தாள்.

'அழகா இருகாருல்ல...'

'ஆமாண்டா செல்லம்என்றவாறே அவளை தடுப்பில் இருந்து கீழே இறக்கி விட்டேன்.கதம்பம் மல்லிகை கலந்த‌ மாலை அணிந்து நெற்றியில் குங்குமம் சந்தணம் சகிதமாக துதிக்கையில் ஒரு செம்பருத்தி மலருடன் பட்டு வேட்டி அணிந்து அழகாக இருந்த‌ பிள்ளையாரை நோக்கி கும்பிட்டு கண்ணத்தில் போட்டுகொண்டேன்.

காசினி பிள்ளையாரை பார்த்து உக்கி போட்டாள் இரண்டு முறை உக்கி போட்டுவிட்டு 'பாய்ய்ய் பிரெண்ட்என்று பிள்ளையாருக்கு கை காட்டினாள்.

'இரண்டு தடவ போடகூடாதுமா உக்கி போட்டா மூனு தடவையா போடனும் திரும்ப உக்கி போடுறீங்களா'

'போ டாடி அது என் பிரெண்டு சாமிதானே ஒன்னும் சொல்லாது'

'அப்டியா உன் பிரெண்ட் ஏத்துக்கிட்டா சரிதான்என்றவாறே பிரகாரத்தை நோக்கி நடந்தோம்.

போகும்போதே சுவரில் கிடக்கும் திருநீரை கையால் வழித்துகொண்டே ஓடினாள்பிரகாரத்தின் கம்பி வளைக்குள் நின்றவாறே அர்ச்சகர் பக்தர்களுக்கு திருநீர் கொடுத்துக்கொண்டிருந்தார்விறுவிறுவென்று கூட்டதினுள் ஒருத்தியாய் சென்று சுற்றுகம்பி வளையத்தின்மேலேறி நின்று தன் கையையும் நீட்டி திருநீறு கேட்டுக்கொண்டிருந்தாள்கொஞ்சநேரம் கழித்து கவனித்த அர்ச்சகர் 'கீழே இறங்குடியம்மா விழுந்திற போறேள்என்றவாறே திருநீரை அவள் நெற்றியில் பூசிவிட்டு என்னிடம் வந்தார்.நான் அவரிடம் பூவை கொடுத்தேன்வாங்கி கொண்டு உள்ளே ஆரத்தி எடுக்க சென்றுவிட்டார்.

கையில் திருநீறு கொடுக்கவில்லை என்ற கோபம் காசினி முகத்தில் தெரிந்தது.நான் அவளை தூக்கி கொண்டேன்.

'ஓம் நமோ பகவதே சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே' 'ஓம் ஸ்கந்தாய நமஓம் குஹாய நமஓம் பாலநேத்ரஸுதாய நமஹா....' தீபாரதனையோடு அர்ச்சகர் வந்தார்.

'எனக்கு கைல திருநீறு வேணும்என்று முகத்தை உம்மென்று வைத்திருந்தாள்.

'சரி நான் வாங்கி தர்றேன்என்றபடி பத்து ரூபாயை எடுத்து தீபாரதனையோடு வந்த அர்ச்சகரின் தட்டில் வைத்தேன்.எனக்கு நெற்றியிலும் கையிலும் திருநீரை கொடுத்தார்.கை நீட்டிக்கொண்டிருந்த அவளின் கையை பிடித்துக்கொண்டு அவளுக்கும் கொஞ்ச‌ம் கொடுங்கள் என்றேன்சிரித்துக்கொண்டே திருநீரை அவளின் கையில் வைத்தார்.

சந்தோசமாக வாங்கி கொண்டவள் கீழே இறங்கி திருநீரை பிசைந்து கொண்டே 'டாடீ காசு கொடுத்தாதான் தின்னீரு தருவாங்களா?'

'இல்லடாகாசு சாமிக்கு கொடுக்கிறது செல்லம் '

'அப்ப ஏன் எனக்கு மொதல்ல தின்னீரு தரல‌?!'

'நீ குட்டி பாப்பா அதான் தரல‌..'

'போ டாடி நாந்தான் வளந்துட்டேன்ல... நீ மறுபடி மறுபடி குட்டி பாப்பானு சொல்ற‌...' 'இனிமே சொல்லகூடாது சரியா...' என ஆட்காட்டி விரலை வைத்து மிரட்டி விட்டுமுன்னே நடக்கலானாள்.

கோவிலை விட்டு வெளியில் வந்தோம்.

கோயிலுக்கு வெளியில் இருந்த யாசகர்களில் இருவர் தட்டினை ஏந்தியபடியே எங்களை பின் தொடர நான் கண்டுகொள்ளாதது போல் நடந்தேன்.

'டாடி.. டாடி... ' என கையை பிடித்து இழுத்தாள் காசினி.

'என்னடா?'

'இவங்களுக்கு காசு குடு'

ஒன்றும் பேசாமல்இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து அவளிடம் கொடுத்து கொடுக்க சொன்னேன்.

'அய்யா அய்யா புண்ணியமா போகும் தர்மம் பன்னுங்க சாமீ....' யாசகர்கள் இன்னொரு பக்தரை நோக்கி நகர்ந்தன‌ர்.

'அவங்கல்லாம் ஏமாத்துவாங்க செல்லம்நாம அவங்களுக்கு காசு கொடுத்து என்கரேஜ் பன்னகூடாதுடா'

'அப்ப கோயிலுக்குள்ள‌ தின்னீரு கொடுக்கிற அங்கிலுக்கு மட்டும் காசு கொடுத்த!' கையில் இருந்த திருநீரை பிசைந்து கொண்டே கேட்டாள்.

நான் எதுவும் சொல்லாமல் மவுனமாக கொஞ்ச தூரம் நடந்தேன்.

'அது சரி சாமிகிட்ட நீ என்ன வேண்டிகிட்ட செல்லம்?' பேச்சை மாற்றினேன்.

'அதுவா... எனக்கு நெறய சாக்லேட் ஐஸ்கிரீம் அப்புறம் அப்புறம் எல்லாமே வேணும்னு வேண்டிகிட்டேன்'

'ஹாஹாஹா.. ஒகே ஆனா அப்பாட்டதான் அவ்வளவு வாங்கி தர பணம் இல்லியே!'

'அய்யைய்யோ பணம் இல்லியா.. சேரி நான் டாக்டர் ஆகி உங்களுக்கு பணம் தர்றேன்'

'ஒகேடா என் செல்லம்என்று தூக்கி முத்தம் கொடுக்க அவளும் திருப்பி ஒரு முத்தம் தந்தாள்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்இரவு சாப்பாட்டை முடித்து தூங்க சென்றோம்.

'டாடி கதை சொல்லுங்க...'

'அப்பாக்கு தூக்கம் வருதுடா'

'ம்கூம் எனக்கு கதை வேணும்'

'ஏண்டா அடம் பிடிக்கிற...!'

'எனக்கு கதை வேணும்...'

'நரி கதை சொல்லவா?'

'ம்ம்ம்ம்... ஓகேஆனா இடையில குரொக்கடைல் சேருங்க அப்புறம் மேக்கப் வரணும் பின்னாடி கதைல‌ ஸ்பைடர்மேன்லாம் வரணும் சரியா'

'சரிடா' , ஏதோ ஒரு நரிகதையை கொஞ்சம் மாற்றி சொன்னேன்.

எல்லாவற்றையும் கேட்டு முடித்தவள்.

'வ்வாஓஓஓஎன வாயை திறந்து கொட்டாவி விட்டு கொண்டே! 'போப்பா சொன்ன கதையே திரும்ப திரும்ப சொல்றகழுத்தை கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

றுநாள் புறப்படுவதற்கு ஆயத்தமாவதை காலையில் இருந்தே கவனித்து வந்த காசினி எங்கோ அப்பா கிளம்புகிறார் என்பதை புரிந்து கொண்டாள்.

'டாடீ எங்க போறீங்க?'

'ஊருக்கு போறேண்டா'

'அப்ப நான் ?'

'இல்லடா நான் மட்டும்தான் போறேன்'

'போ நானும் வருவேன்!'

'அம்மா இருக்காங்கஆச்சி கூட உன் கூட வந்து இருப்பாங்களாம் அப்புறம் என்ன என் செல்லத்துக்கு?'

'ஆனா நீங்க போறீங்களே' .

'நீங்க நல்லா படிங்க அப்பா போய்ட்டு சீக்கிறம் வந்துருவேன்உனக்கு நெறய சாக்லேட் ஐஸ்கிரீம் ட்ரெஸ் எல்லாம் வாங்கிட்டு வர்ரேன்'

'நாளைக்கு வந்துருவீங்களா?'

'சரிடா வந்துர்றேன்.'

'எனக்கு லீவு இருக்குமே அந்த நாளைக்கு வந்துருவீங்களா?'

'ஆமா வந்துருவேன்'

'அப்ப எனக்கு யாரு கதை சொல்றது?'

'அம்மா சொல்வாடா...'

'போ... மம்மி கேவலமா கதை சொல்லும்...'

'நான் நல்ல கதையா சொல்ல சொல்றேன் ஒகேவா...'

'ஆனா எனக்கு அழுக அழுகையா வருதே...' கண்ணீர் கண்களின் ஓரங்களில் எட்டிப்பார்த்தது!

'நீ நல்ல பொண்ணுலஉன்ன டாக்டரா படிக்க வைக்கனும்ல அதுக்குத்தானே அப்பா போறேன்'

'நான் படிச்சு டாக்டர் ஆயிருவேன்நீங்க இங்க இருங்க...'

'எனக்கு தெரியும் செல்லம் ஆனா அதுக்கு பணம் வேணுமில்ல‌ அதுக்குதான் அப்பா போறேன்'

'அதுதான் உண்டியல்ல நான் சேத்து வச்சிருக்கேன்ல அத எடுத்துக்கலாம்...'

'அது உனக்கு பொம்மை வாங்க சேத்து வெச்சிருக்கேனு சொன்ன?'

'ஆமால்ல... சரி... நீங்க சீக்கிறம் வந்திருவீங்களா?'

'போய்ட்டு உடனே வந்துருவேண்டா..' கையில் வைத்திருந்த சாக்லேட் பட்டைகளை அவளிடம் கொடுத்தேன்.

கழுத்தை கட்டிக்கொண்டு கண்ணங்களில் முத்தமிட்டாள்.நானும் பிரிய மனமில்லாமல் கட்டிகொண்டேன்.

ரு உலுப்பலில் எழுந்தவன் முகத்தை மூடியிருந்த கர்சீப்பை வைத்து கண்ணங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்.நான் வந்த எமிரேட்ஸ் விமானம் வேகம் குறைந்து ஓடுதளத்தில் இறங்க தயாராகி கொண்டிருந்தது.

சன்னல் வழியே எட்டி பார்த்தேன்,விமான நிலையத்திலேயே சென்னை பெருவெள்ளத்தின் விபரீதங்களெல்லாம் புரிந்ததுஇன்னும் தண்ணீர் வடியாமல் ஆங்காங்கே குளம் போல் தெரிந்தது.சென்னை விமான நிலையத்தின் முன் மெட்ரோ இரயிலுக்கான பாதையும் ,விமான நிலையத்தின் அமைப்பும்புதிதாக போட்டிருந்த பாலமும் வெறிச்சோடி கிடந்ததுமூன்று வருடங்களுக்கு முன் அப்பொழுதுதான் வேலையை ஆரம்பித்திருந்தனர்இப்போது கிட்ட தட்ட வேலை முடிந்திருந்தது.ரோடுகள் குண்டும் குழியுமாக இருந்தனபெரும்பாலான இடங்களில் மண்ணை கொட்டி போக்குவரத்துக்கு தயார் படுத்தி இருந்தனர்.வெளியில் வந்து ஆட்டோவை தேடினேன்.

'ரோடு சரியில்ல சார்.. அங்கல்லாம் வண்டி போவாது சார்..' இருந்த ஒன்றிரண்டு ஆட்டோக்களும் வர மறுத்தனர்.

மூன்று நாட்களாக எந்த தொடர்பும் இல்லாத என் உலகத்தை காண‌ப்போகிறோம் என்ற ஆவலில் அப்பொழுது அங்கு வந்த ஒரு பேருந்தில் முண்டி அடித்து ஏறிக்கொண்டேன்பேருந்து அடையாறு ஆற்றை கடக்கும்போது கவனித்தேன்வெள்ளம் தன் பலத்தின் வடுவை கரையோர மரங்கள்கட்டிடங்கள் என‌ பல‌ இடங்களிலும் பதித்திருந்தது அது என் வயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்தததோடு நரம்புகளின் சத்தம் வேகமாக அதிகரிப்பது போன்ற உணர்வும் சேர்ந்து மனதை கலங்க செய்தது. நல் உள்ளங்கள் பலர் போக்குவரத்தை சரி செய்தும்உணவு;தண்ணீர் வழங்கியதையும் காணஎப்போதோ படித்த தமிழர் பண்பாட்டை இன்று நினைத்து இதயம் நெகிழ்ச்சி அடைந்தது.

இயற்கை காசினியின் கனவுக்கு வழிவிட்டிருக்கும் என்ற நம்பிக்கையோடு பேருந்தை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தேன் இல்லை ஓடினேன்.